மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தகவல்களை வெளியிடுவதற்கு வருந்துகிறோம். அனைத்து தகவல்களையும் சரியாகக் கொடுக்கவேண்டும், அனைத்து வேலைகளையும் முறையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக பதிப்பிக்கும் வேலைகளை இடை நிறுத்தம் செய்ய வேண்டியிருந்தது.
பல விசயங்களை நாம் இவ்விடைகாலத்தில் செய்து முடித்திருக்கின்றோம் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. அரவக்குறிச்சி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் என்ற பெயரில் நம்மை மாற்றியிருப்பது. (Aravakurichi Muslim Welfare Association "AMWA")
2. அதனை முறையாக பதிவாளரிடம் பதிவு செய்துள்ளது. அதன் பதிவு எண்.125/2010.
3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அரவக்குறிச்சி கிளையில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. கணக்கு எண் 31504946262.
4. நமது அசோசியேசனுக்கு என தனியே ஒரு செல்போன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்.96 77 837 637.
5. நமது அசோசியேசனுக்கு இந்திய வருமான வரிச்சட்டம் பிரிவு 80ஜி-யின் கீழ் வருமான வரி விலக்கு கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
6. நமது சங்கத்திற்கென www.amwa.co.in என ஒரு வலைத்தளம் பதிவு செய்யப்பட்டு அதன் வடிவமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
7. கட்டிட வடிவமைப்புப் பணிகள் அனைத்தும் முழுமையடைந்து விட்டன. இன்ஷாஅல்லாஹ் அனைத்துப் கோப்புகளும் (Report) இன்னும் சில தினங்களில் தயாராகிவிடும்.
அனைத்து புதிய தகவல்களுடன் விரைவில் வருகிறோம். அன்புடன் அம்வா
Dear Team,
பதிலளிநீக்குThanks for ur latest update .
regards,
sheik