பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கூட்டுக் குர்பானி 2012

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்.
எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் நமதூரில் ரமலான் உணவுக் கமிட்டி சார்பாக முதல் முறையாக இந்த ஆண்டு கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒரு பங்கின் தொகை ரூபாய் 1300/- என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜமாத்தார்கள் தங்களுடைய கூட்டுக் குர்பானியின் பங்குத் தொகையை ரமலான் உணவுக் கமிட்டி நிர்வாகிகளிடம் செலுத்தி பதிவுசெய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.

”குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை, ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக நீங்கள் பெருமை படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்திருக்கின்றான். ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அல்குர்ஆன் 22:37”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக