பின்பற்றுபவர்கள்

சனி, 30 அக்டோபர், 2010

கடிதம் 30.10.10 - 5.38 am

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களுடைய ஒவ்வொரு கமெண்டைஸ்-ஸையும் படிக்கையில் இந்தப்பள்ளி கட்டுமானப் பணிகளில் தங்களுக்கிருக்கும் ஆர்வத்தை எங்களால் உணர முடிகின்றது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமது வலைப்பக்கத்தில் சில விசயங்களை பதிப்பிக்காமல் உள்ளோம். (மேப், எஸ்டிமேட், புகைப்படம்)

இன்ஷா அல்லாஹ் ஒரு வார கால இடைவெளிக்குப்பிறகு எல்லாவித தகவல்களையும் முழுமையாக வெளியிடுகின்றோம்.

கட்டட விரிவாக்கம் சார்ந்த சில தகவல்கள்.

1.கட்டடம் முழுமையாக இடிக்காமல் மையப்பள்ளியை அப்படியே வைத்துக் கொண்டு கீழ்புறமும், தென்புறமும் விரிவாக்கம் செய்வது. (Southern and Eastern side of the Main Prayer Hall)

2. கீழ்புறமுள்ள மண்டபம், திண்ணை, மதரசாவின் ஒரு பகுதி இவைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய கட்டுமானம் செய்வது.

3.தற்போதுள்ள கழிப்பறைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு தென் கோடியில் கட்டுவது.

4.இதன் அடிப்படையில் கட்டட பொறியாளரிடம் பிளான் வரையப்பட்டுள்ளது.

5. இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ள பணிகளை மார்க்க அறிஞர்களிடமும், விசயமறிந்த அறிஞர்களிடமும் கலந்து அவர்களிடம் ஆலோசனைகளைப் பெறவே அவர்களின் வருகை ஏற்பாடு செய்யப்படுகின்றது.

6. இதுவரைவந்த மார்க்க அறிஞரும், பொறியாளரும் நமது திட்டமிடலை பாராட்டி துஆச் செய்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து கமிட்டியின் செயல்பாடுகள்

7. மைய மண்டபத்தின் உறுதித் தன்மையை அறிய அதெற்கென தனியே ஒரு பொறியாளரை வரவழைத்து ஆய்வு செய்து அறிக்கை பெறுவது.

8.அறிக்கையின் தன்மை மையமண்டபம் உறுதியானது என உறுதிசெய்ப்பட்டால் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டுள்ள வரைபடத்தின் பணிகளை தொடர்வது,  இல்லாவிடில் கட்டடத்தை முழுவதுமாக இடித்து புதிய வடிவமைப்பின்படி கட்டுவது.

9. கட்டட கமிட்டியை சட்டப்படி பதிவு செய்வது. ( அற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்தாகிவிட்டது)

10. கமிட்டியின் பெயரில் இன்டர்னேஷனல் வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது. மேலும் வரிச்சலுகைகளுக்காகவும், வெளிநாட்டிலிருந்து பணம் பெறவும் உரிய அனுமதியும் மத்திய மற்றும் மாநில அரசிடம் பெறுவது.

11.இன்ஷாஅல்லாஹ் வலைப்பக்கத்தை வலைத்தளமாக மாற்றுவது.

உள்ளுரில் சிறுவசூல் செய்யப்படுகின்றது அதில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. சுமார் பத்து லட்சம் அளவுக்கு பணமாகவும், ஐந்து லட்சம் அளவுக்கு பொருளாகவும் கொடுப்பதாக ஊர்காரர்கள் சிலர் நிய்யத் வைத்து வாக்களித்துள்ளனர்.

2 கருத்துகள்: